
ஏற்படுத்தி கூடங்குளம் அணுவுலைக்கு எதிராக பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அண்மையில் ஜப்பானில் புகுசிமா அணுவுலைகள் வெடித்து பயங்கரமான
விளைவுகளை ஏற்படுத்தியுள்ள சூழலில் கூடங்குளம் அணுவுலையை மூடவேண்டும் என்ற கோரிக்கையை மையமாக வைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களது நிலைப்பாட்டினை அறிவிக்கவேண்டும் என்று கோரி அனைத்து அரசியல் கட்சிகளையும் கேட்டு கடிதம்
அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நாகர்கோவிலில் நடைபெற்றது. அப்போது "அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்" ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.சுப.உதய குமார் கூறியதாவது;

மத்திய சுற்று சூழல் அமைச்சக குழு ஒன்று கூடங்குளம் அணுஉலைகள் 3,4,5,6 கடலோர ஒழுங்குமுறை சட்டத்தை (1991) மீருவதாகப் படுவதால் அவற்றிற்கு அனுமதி அளிக்க
முடியாது என அறிவித்திருக்கிறது. இந்த உலைகளை குளிர்விக்கும் தண்ணீர் கடலுக்குள் விடப்பட்டால் மீன் வளம், உணவு பாதிக்கப்படும் அபாயத்தை அந்த குழு கோடிட்டு காட்டியிருக்கிறது. இந்த அறிக்கையை பெற்றுக் கொண்ட அமைச்சர் ஜெயராம் ரமேஷ், கூடங்குளம் உலைகள் 3,4,5,6 கடலோர ஒழுங்குமுறை சட்டத்தை மீருகின்றனவா என்றுக் கண்டறியப்படும் என அறிவித்திருக்கிறார்.
இது மக்களை திசை திருப்புகின்ற ஒரு கபட நாடகம். கூடங்குளம் உலைகள் 1,2 பற்றி அந்த குழுவோ, அமைச்சரோ வாய் திறக்காமல் இருப்பது ஏன்? உண்மையிலேயே மக்கள்
நலம் பேணுகின்ற அரசாக இருந்தால் ஒட்டு மொத்த கூடங்குளம் அணுமின் திட்டத்தை உடனடியாக இழுத்து மூட வேண்டாமா?.
இதற்கிடையே கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நடந்த மாதிரி எரிபொருள் ஆய்வு (Dummy Fuel Test) தோல்வி அடைந்து விட்டதாக ஒரு வதந்தி உலவி வருகிறது. இது பற்றி மத்திய அரசோ, அணுசக்தி துறையோ, கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகமோ எதுவும் பேசவே இல்லையே ஏன்?

மகாராஷ்டிரா மாநிலம் ஜெய்தாபூரில் கட்டப்படும் அணுஉலை
திட்டத்தை சிவசேனா கட்சியும், இடதுசாரி கட்சிகளும் தீவிரமாக எதிர்க்கின்றன.அதுபோல மேற்கு வங்காளத்தில் ஹரிபூரில் கட்டப்படவுள்ள அணுமின் நிலையத்தை
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும், மாவோயிஸ்டுகளும் பலமாக எதிர்க்கின்றன.
ஆனால் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் கல்பாக்கம், கூடங்குளம் அணுஉலை(கொலை) பூங்காக்கள் பற்றி எதுவுமே பேசாது வாய் மூடி மௌனிகளாக இருக்கின்றனர். இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவில் தமிழகத்தின் தலைபகுதியிலும், கால் பகுதியிலுமாக மிக பெரிய அணுமின் பூங்காக்கள் கட்டப்படுகின்றன. 2004 -ம் ஆண்டு நடந்த சுனாமி இரு உலைகளையுமே நேரடியாக பாதித்தது. கூடவே தேனீ மாவட்டம் போடி மேற்குத் தொடர்ச்சிமலை பகுதியில் நியுட்ரினோ அணுதிட்டம் ஓன்று துவக்கப்பட இருக்கிறது.
ஜப்பான் நாட்டில் உள்ள புகுஷிமா விபத்து நடந்த பிறகும் தமிழக அரசியல் கட்சிகளும், தலைவர்களும் வாய்பொத்தி நிற்பது வேதனையாக உள்ளது. கேரளாவில் உள்ள அனைத்து
கட்சிகளும், தலைவர்களும் அம்மாநிலத்தில் அணு உலைகள் கட்டுவதை ஏகமனதாக எதிர்க்கின்றனர். ஆனால் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று பேசுகின்ற நம்மவர் பாராமுகமாக இருக்கின்றனர்.
அதுபோலவே மதகுழுமங்களும், பெரும்பான்மை தொண்டு நிறுவனங்களும் தமிழ்மக்களை நிர்க்கதியாக நடுத்தெருவில் விட்டுவிட்டு அவரவர் சுயலாபங்களை பார்த்துக் கொண்டு சுகமாக இருக்கின்றனர். இந்த அரசியல் கட்சிகளும், தலைவர்களும், மதகுழுமங்களும், தொண்டு நிறுவங்களும், கூடங்குளம், கல்பாக்கம், தேனீ பற்றிய தங்கள் நிலைபாட்டை தமிழ் மக்களுக்கு அறியத்தர வேண்டும்.

தொடர்ந்து மவுனம் காத்தால் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் நாங்கள் இறங்குவோம் என்று தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவின் பிற மாநிலங்களில் அரசியல் கட்சிகள் மக்களின் நியாயமான எதிர்ப்பிற்கு தங்களது ஆதரவினை நேரடியாகவும் மறைமுகமாகவும் கொடுத்து மக்கள் விரோத
திட்டங்களை தங்களது பகுதியில் இருந்து விரட்டியடிக்கும் போது தமிழகத்தில் மட்டும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு சாதகமாக இலாத நிலைதான் காணப்படுகின்றது. எனவே தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது
நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிப்பதோடு மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்குடன் செயல்படுத்தப்படும் அணுவுலைத் திடங்களை தமிழகத்தை விட்டு விரட்ட
முன்வரவேண்டும் என்பதே நமது ஆவலாகும்.
No comments:
Post a Comment